புதுடெல்லி: 'ரெட் ஐ' என்னும் நள்ளிரவு நேர உள்நாட்டு விமானச் சேவையை குறைந்த கட்டணத்தில் நவம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. "இந்த நள்ளிரவு விமானச் சேவைகள் மூலம் சராசரி கட்டணங்களை விட குறைந்த செலவில் பயணம் செய்யலாம். பெருநகர சாலை களில் பரபரப்பான நேரங் களின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் ஓட்டல்களில் தங்கும் செல வினங்களையும் தவிர்க்க லாம்," என ஏர் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த நள்ளிரவு விமானச் சேவைகளின் கட்டணம் பகல் நேரத்தில் இயக்கப்படும் உள் நாட்டு விமானங்களுக்கான கட்டணத்தைவிடவும் குறைவாக இருக்கும் எனவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லி-கோவா, டெல்லி- கோயமுத்தூர், பெங்களூரு-அஹமதாபாத் ஆகிய வழித்தடங்களில் நவம்பர் 30ஆம் தேதி நள்ளிரவு நேர சேவை தொடங்கப்பட உள்ளது.

