காவிரிப் பிரச்சினையின் கதாநாயகன் திமுக: முதல்வர் விமர்சனம்

காவிரிப் பிரச்சினையின் கதாநாயகன் திமுக: முதல்வர் விமர்சனம்

1 mins read

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் கோரிக்கை என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதற்காக அதிமுக அரசு கொடுத்த அழுத்தம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். "காவிரிப் பிரச்சினையின் கதாநாயகனே திமுகதான். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது கிடைத்த வாய்ப்பை எல்லாம் தவறவிட்டு தமிழகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. "கூட்டணியை விட்டு விலகுவோம் என திமுக கூறியிருந்தால், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திருக்கும்," என்று சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டபோது முதல்வர் பழனிசாமி சாடினார். காவிரி விவகாரத்தில் திமுக இழைத்திருப்பது ராஜதுரோகம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.