போராட்டம் எதிரொலி: வெறிச்சோடிக் காணப்பட்ட கோயம்பேடு காய்கறிச் சந்தை

1 mins read
17bf853b-73bc-4a1c-8827-9a79b8e9196c
-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளும் நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் எப்போதும் பரபரப்பாகக் காட்சியளிக்கும் கோயம்பேடு பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது. படம்: தகவல் ஊடகம்