சென்னை: தமிழக அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலை வர் கமல்ஹாசன் தெரிவித் துள்ளார். சீர்திருத்தப் பணியை மேற் கொள்ள வேண்டியது மக்களின் கடமை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். நேற்று முன்தினம் ஊடகவிய லாளர்களுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார் கமல். அப்போது பல்வேறு கருத்துகளை அவர் தெரிவித்தார். "யாரோ ஓர் அரசியல்வாதி வருவார், அவர் அனைத்தையும் திருத்துவார் என்று நினைக்காமல், மக்கள் தங்கள் பொறுப்பாக அனைத்தையும் ஏற்றுச் செயல்பட வேண்டும். "வாக்களிக்க பணம் வாங்கக் கூடாது. வாக்களிப்பது தலையாய கடமை. யாரைத் தேர்ந்தெடுக்கிறீர் களோ அவர்களிடம் துணிவாக கேள்விகளைக் கேட்கவேண்டும். அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சுயநலங்களை மக்கள் பிரதி பலிக்கக்கூடாது," என்றார் கமல்.
கமல்ஹாசன்: தமிழக அரசியல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்
1 mins read
-

