17 இடங்களில் போராட்டம்; 5,000 திமுகவினர் கைது

17 இடங்களில் போராட்டம்; 5,000 திமுகவினர் கைது

1 mins read
56d8d0f9-076a-4822-b0cb-9c3a783d3c19
-

சென்னை: கட்சித் தலைமையின் அறிவிப்பை அடுத்து திமுகவினர் நான்காவது நாளாக நடத்திய போராட்டம் காரணமாக சென்னை யில் இயல்பு வாழ்க்கை நிலை குத்தியது. மொத்தம் 17 இடங் களில் நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 5,000க்கும் மேற்பட்ட திமுகவினர் கைதாகினர். காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் பல் வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாகத் திமுக சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்றும் சென்னையின் பல்வேறு பகுதி களில் நடந்த மறியல்களில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.