ராஜஸ்தான்: பதற்றம் தணியாத பகுதிகளில் போலிஸ் குவிப்பு

ராஜஸ்தான்: பதற்றம் தணியாத பகுதிகளில் போலிஸ் குவிப்பு

2 mins read

ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் போராட்டம் வலுப்பெற்று வருவதை அடுத்து கரவ்லி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நேற்று பிற்பகலில் அந்த உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பதற்றம் மிகுந்த பகுதிகளில் ஏராளமான அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரவுளி மாவட்டத்தின் ஹிண்டாவுன் என்னும் இடத்தில் இரு தலித் தலைவர்களின் வீடு கள் தீ வைத்துக் கொளுத்தப்பட் டதைத் தொடர்ந்து பதற்றம் அதி கரித்தது. மூவாயிரம் முதல் நாலாயிரம் வரையிலானவர்கள் அடங்கிய கும்பல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமாரி ஜாதவ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரோசிலால் ஜாதவ் ஆகியோரின் வீடுகளுக்குத் தீ வைத்தது. தலித் சமூகப் பிரிவைச் சேர்ந்த அவ்விருவரும் சம்பவம் நிகழ்ந்த வேளையில் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினர்.

திங்கட்கிழமை தலித்கள் நடத் திய பாரத் பந்த் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை வெடித் தது. கிட்டத்தட்ட 20,000 பேர் பங்கேற்ற அப்போராட்டத்தின்போது பலர் தாக்கப்பட்டனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆனது. அந்த வன்செயல் களுக்கு எதிராக நேற்று முன் தினம் வர்த்தகர்களும் தலித் அல் லாதவர்களும் போராட்டம் நடத் தினர். அப்போது தீ வைப்புச் சம்ப வங்கள் ஆங்காங்கே நடைபெற்ற தாக பரத்பூர் வட்டார தலைமை போலிஸ் அதிகாரி அலோக் குமார் வ‌ஷிஷ்தா கூறினார். தீவைத்த கும்பல் ஜாதவ் குடி யிருப்பைத் தாக்கும் நோக்கில் ஓடியபோது போலிசார் தலையிட்டு கும்பலைக் கலைத்ததாக அவர் சொன்னார். நேற்று குறிப்பிடத்தக்க அசம்பா விதச் சம்பவங்கள் நிகழாத போதி லும் பதற்றம் தணியவில்லை.