ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம்: திமுக திட்டவட்டம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம்: திமுக திட்டவட்டம்

fallback

06 Apr 2018 - 6:00 am

1 mins read

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை திமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அந்த ஆலை தமிழகத்தில் அமைய சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று, அடிக்கல் நாட்டியதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் என்றார். "அனுமதி வழங்கிய பிறகே அடிக்கல் நாட்ட முடியும். ஆனால் இந்த உண்மை தெரியாமல், அதிமுகவினர் நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். ஆனால் ஆலைக்கு திமுகதான் அனுமதி அளித்தது என்று அதிமுகவினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்," என்றார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.