கடற்கரை சாலையில் குவிந்த தொண்டர்கள்

கடற்கரை சாலையில் குவிந்த தொண்டர்கள்

1 mins read
ea005a1e-be6d-4994-b4e1-ea6b547f37c0
-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் சென்னையில் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சித் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் திரளாகக் கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். சென்னை கடற்கரைச் சாலையில் அண்ணா நினைவிடத்துக்கு முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நிலைகுத்தியது. இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். படம்: ஏஎஃப்பி