சென்னை: தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரம் பேர் அக்காய்ச்சலால் பாதிக்கப்பட் டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண் டும் என மாநில சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் டெங்கி காய்ச்சலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதாரம் மற் றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறையின் இயக்குநர் மருத்துவர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைப் போல் நடப் பாண்டில் டெங்கி பாதிப்பு அதிக மாக இருக்காது என்று குறிப்பிட் டுள்ள அவர், யாருக்கேனும் தொடர் காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். "தண்ணீர் சேமித்துவைக்கும் தொட்டிகளை நன்றாகத் தேய்த்துக் கழுவி மூடிவைக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மீண்டும் பரவும் டெங்கி: மூன்று மாதங்களில் ஆயிரம் பேர் பாதிப்பு
1 mins read

