சாமி ஆடுவதைப் போல் மனைவியைத் தாக்கினார்

சாமி ஆடுவதைப் போல் மனைவியைத் தாக்கினார்

fallback

07 Apr 2018 - 6:00 am

1 mins read

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன், 32, என்பவர் நாள்தோறும் குடித்துவிட்டு தனது 26 வயது மனைவியான பாண்டியம்மாளுடன் தகராறு செய்துவந்ததை அடுத்து குடும்பத்தில் பிரச்சினை மூண்டது. இருவரும் கோயில் திருவிழாவுக்குச் சென்றபோது திடீரென்று ஆனந்தன் தனக்கு அருள் வந்தது போல சாமி ஆடி மனைவியைக் கல்லால் அடித்து கீழே தள்ளினார். ஆனந்தன் கைதானார். பாண்டியம்மாள் மருத்துவமனையில் இருக்கிறார்.