ஸ்டெர்லைட் எதிர்ப்பு: மேலும் பல கிராமங்கள் ஆதரவு

ஸ்டெர்லைட் எதிர்ப்பு: மேலும் பல கிராமங்கள் ஆதரவு

1 mins read

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 53வது நாளாக நேற்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தும் கிராமங்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்து உள்ளதாகவும் தொடர்ந்து அக்கம்பக்கத்துக் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக வும் அ.குமரெட்டியா புரம் என்ற ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் இந்தப் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.