சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்நாடு வியாழன்று முழு வேலை நிறுத்தத்தில் குதித் ததை அடுத்து கர்நாடகத்துடன் கூடிய அதன் எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. கர்நாடகத்தில் இருந்து வந்த பேருந்துகள், லாரிகள் எல்லாம் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடி யாமல் திரும்பின. சாலைகளின் ஓரமாக ஏராளமான வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், தமிழ்நாட்டுக் குப் பதிலடியாக கர்நாடகாவும் ஏப்ரல் 12ஆம் தேதி வேலை நிறுத் தத்தில் ஈடுபடப்போவதாக அந்த மாநிலத்தின் வட்டல் நாகராஜ் அறிவித்து இருக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ் நாடு அரங்கேற்றும் தந்திரங் களுக்கு எதிராக கன்னட ஆத ரவு அமைப்புகள் எல்லாம் சேர்ந்து தண்ணீருக்காகக் குரல் கொடுத்து வேலை நிறுத்தம் நடத்தப்போவ தாக அவர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் நடந்த வியாழக்கிழமையன்று கர் நாடக போக்குவரத்துக் கழகம் காலை முதல் மாலை வரை 211 பேருந்துகளை ரத்துசெய்தது.
மாலை 5.30 மணியளவில் பேருந் துச் சேவை தொடங்கியது என் றாலும் கர்நாடக போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.26.49 லட்சம் இழப்பு ஏற்பட்டது. கர்நாடகத்தைச் சேர்ந்த 12,000 லாரிகள் உட்பட ஏறக்குறைய 55,000 லாரிகள் செயல்பட முடிய வில்லை என்றும் இதனால் ஏற்பட்ட இழப்பு ரூ. 200 கோடி வரை இருக்கும் என்றும் மோட்டார் போக்குவரத்து நல்வாழ்வுச் சங்க தென்மண்டல தலைமைச் செய லாளர் சண்முகப்பா கூறினார். இதனிடையே, வரும் 11ஆம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அன்புமணி ராமதாஸ் தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. முந்தையப் போராட்டங்களைப் போலவே இப்போராட்டத்துக்கு பாமக முழு ஆதரவை தெரிவிக் கிறது என்றும் வேலைநிறுத்தத் துக்கு அனைத்துத் தரப்பும் ஆதர வளிக்கவேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரினார்.

