'தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை அனுப்புகிறார்கள்'

'தண்ணீர் கேட்டால் துணை வேந்தரை அனுப்புகிறார்கள்'

1 mins read

சென்னை: கர்நாடகாவிலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பிவைக் கிறார்கள் என நடிகர் கமல் ஹாசன் கூறினார். காவிரி விவகாரம், ஸ்டெர் லைட், நியூட்ரினோ திட்டம் போன்ற பிரச்சினைகளோடு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தமி ழகத்தின் புதிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்துக்கும் கர்நாடகா வுக்கும் இடையே காவிரி விவ காரம் தொடர்பான பிரச்சினை கள் உச்சத்தில் நடந்துகொண் டிருக் கும்போது துணைவேந்த ராக கர்நாடகாவைச் சேர்ந்தவர் நியமிககப்பட்டு இருப்பது தமிழ கத்தில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, சென்னை அம் பேத்கர் சட்டக்கல்லூரி துணை வேந்தராக கோல்கத்தாவைச் சேர்ந்த சூரிய நாராயண சாஸ் திரி அண்மையில் நியமிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், "கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பிவைக் கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய, மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத் தேவையில்லை," என்று எண்ணிவிட்டார்களா என டுவிட்டரில் குறிப்பிட்டார். இந்தியாவின் பிரதமர் பதவிக் குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப் பில்லை. துணைவேந்தர் பதவிக் குமா ஒரு தமிழருக்குத் தகுதி யில்லை? மத்திய அரசின் இது போன்ற செயல்களெல்லாம் தமி ழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா? எனக் கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பி உள்ளார்