தமிழகத்தின் உரிமையை தொலைத்தவர்களே இப்போது குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு

தமிழகத்தின் உரிமையை தொலைத்தவர்களே இப்போது குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: அண்ணா பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படவில்லை என தமிழக பாஜக தலைவி தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் நியமனம் என்பது ஊழல் மயமாகிக்கொண் டிருந்த பல்கலைகளை உண்மை யில் கல்வி மயமாக்கும் முயற்சி என்று அவர் கூறியுள்ளார். "நியமனத்தில் ஊழல் ஏதும் இல்லை. கல்வியைக் கல்வியாக மட்டுமே பார்க்க வேண்டும். அரசியலைப் புகுத்த வேண்டாம். "தமிழகத்தின் உரிமையைத் தொலைத்தவர்களே இப்போது நடைப்பயணம் போகிறோம், ஆர்ப் பாட்டம் செய்கிறோம் என்று கூறி மாநிலத்தில் குழப்பம் ஏற்படுத்து கின்றனர். மக்கள் உணர்வை வேறுவிதமாக திசை திருப்புவதை ஏற்க முடியாது," என்று சென்னை யில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசியபோது தமிழிசை தெரி வித்தார்.

இன்றைய சூழலில் தமிழகத் திற்கு ஒரு மாற்றம் தேவைப்படு வதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு சிலர் தமிழகத்தைக் கிளர்ச்சிக் களமாகவும் போராட்டக்களமாக வும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவதாகச் சாடினார். தமிழகத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்று தெரிவித்த தமி ழிசை, காவிரி நதிநீர் விவகாரத் தில் தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். "காங்கிரஸ், திமுக, கம்யூ னிஸ்ட் கட்சிகளால் மறுக்கப்பட்ட காவிரி, பாஜக ஆட்சியில் பாய்ந் தோடப் போகிறது. அதற்கு சில வாரங்கள் அவகாசம் கேட்டுள் ளோம். எது எப்படி இருந்தாலும் தமிழக உரிமை நிச்சயம் மீட்டெ டுக்கப்படும்," என்றார் தமிழிசை.