பிரேமலதா: மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது

1 mins read
b226e1ed-c333-4db3-99bf-b28e9dd06bc2
-

திருவாரூர்: நிறைய பிரச்சினைகள் நிலவுவதால் தமிழகம் தற்போது போராட்டக் ளமாக மாறிவிட்டது என பிரேமலதா விஜயகாந்த் தெரி வித்துள்ளார். திருவாரூரில் தேமுதிக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் தில் கலந்துகொண்டு பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் தற்போதைய மோச மான நிலைக்கு இம்மாநிலத்தை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சியும்தான் காரணம் என்று சாடிய அவர், இந்த உண்மையை மறைத்துவிட்டு இருதரப்பினரும் போலித்தனமான போராட்டங்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். "ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. நாங்கள் விவ சாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள். எனவே அவர்களின் பிரச்சி னைகளை அறிந்தவர்கள்.