பழங்குடியினராக காட்டுக்குள் குடியேறும் நூதனப் போராட்டம்

பழங்குடியினராக காட்டுக்குள் குடியேறும் நூதனப் போராட்டம்

1 mins read
82a8ffdb-1c0b-4d6e-bc9e-890dab20f631
-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி யும் தமிழக மக்கள் எழுச்சிக் கழகத்தின் சார்பில் ராம நாதபுரத்தில் காட்டுக்குள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சித் தொண்டர்கள் பழங்குடியின மக்கள்போல் வேடமிட்டு தங்கள் குடும்பத்தினர், குழந்தைகள், கால்நடைகள் ஆகியவற்றுடன் புல்லாணி அம்மன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்குள் குடியேறினர். மேலும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங் களும் எழுப்பினர். இதை அடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத் தினர். படம்: தமிழக ஊடகம்