மணமகள் மாயம்; கல்யாணப் பெண்ணாக மாறிய கல்லூரி மாணவி

மணமகள் மாயம்; கல்யாணப் பெண்ணாக மாறிய கல்லூரி மாணவி

2 mins read

ஆலங்குடி: மணப்பெண் மாயமான தால் கல்லூரி மாணவி திடீர் மண மகளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக் கும் கறம்பக்குடி தாலுகா தீத் தானிப்பட்டி சண்முகநாதன் மகன் நதீஷ் என்பவருக்கும் கடந்த புதன் கிழமை திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்து வந்தபோது திருமணத்திற்கு முதல்நாள் மணப் பெண்ணைக் காணவில்லை. இதுகுறித்து ஆலங்குடி போலிசில் புகார் செய்யப்பட்டது. நிச்சயிக்கப் பட்ட பெண் திடீரென மாயமானது குறித்து தகவல் அறிந்த மாப் பிள்ளை வீட்டார் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில் வேறு பெண்ணை பார்த்து திருமணம் நடத்தியே தீருவது என்று முடிவு செய்தனர்.

அதன்படி பாச்சிக்கோட்டையி லிருந்து வந்து ஆலங்குடி படேல் நகரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை மாப்பிள்ளை வீட்டார் அணுகி அவரது மகள் தேவதர் ‌ஷினியை (20) பெண் கேட்டனர். அதற்கு அவர் தனது மகள் கல்லூரியில் படித்துக்கொண்டிருப் பதாகவும் படிப்பு முடிந்த பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க முடியும் என்றும் கூறினர். அதற்கு மாப்பிள்ளை வீட்டார், "திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து படிக்கட்டும். வரதட் சணை எதுவும்வேண்டாம்," என்று கூறினர். அவர்களின் வற்புறுத் தலைத் தட்டமுடியாத கார்த்திக்கும் அவரது குடும்பத்தாரும் திருமணத் திற்குச் சம்மதித்தனர்.

அதன்பிறகு செவ்வாய்க்கிழமை இரவே நிச்சயம் செய்து பெண்ணை அழைத்துக் கொண்டு குமரமலை முருகன் சன்னதியில் வைத்து நதீசுக்கும் தேவதர்‌ஷினிக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். நிச்சயிக்கப்பட்ட பெண் காணா மல் போனாலும் தக்க சமயத்தில் கைகொடுத்த கல்லூரி மாணவி தேவதர்‌ஷினியை மாப்பிள்ளை வீட் டாரும் நண்பர்களும் புகழ்ந்தனர்.