இடுப்பைக் கிள்ளிய விவகாரத்தில் திமுக பெண் நிர்வாகி கொதிப்பு

இடுப்பைக் கிள்ளிய விவகாரத்தில் திமுக பெண் நிர்வாகி கொதிப்பு

1 mins read
8d397505-0a9d-4318-bfe4-482c8b7504fb
-

கரூர்: இடுப்பைக் கிள்ளிய விவ காரத்தில் நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டேன் என திமுக மகளிர் அணி நிர்வாகி கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பாக கரூர் மாவட்ட ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற வர்கள் கைது செய்யப்பட்டு தனி யார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்த மண்டபத்தில் தமக்கு அருகில் இருந்த திமுக மாணவரணியைச் சேர்ந்த பிரபா கரன் என்பவர் தமது இடுப்பைக் கிள்ளி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திடீரென்று திமுக மாவட்ட மகளிரணி துணைத் தலைவி ஜெயமணி கிரிவாசன் குற்றச்சாட்டு எழுப்பினார்.

சம்பவம் குறித்து ஊடகங்க ளிடம் ஜெயமணி விளக்கினார். "எங்களை கைது செய்து மண்ட பத்தில் அடைத்து வைத்திருந்த போது பிரபாகரன் என் இடுப்பைக் கிள்ளினார். அதனால் அதிர்ச்சி யடைந்த நான் நகரச் செயலாளர், மாவட்டச் செயலாளர் ஆகியோ ரிடம் இதுகுறித்து முறையிட்டேன். "ஆனால், பிரபாகரன் மீது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியின் செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் தலை யிட்டு நடவடிக்கை எடுக்கும் வரை இந்தப் பிரச்னையில் இருந்து ஓயமாட்டேன்," என்றார்.

போலிசுடன் ஜெயமணி கிரிவாசன். படம்: தமிழக ஊடகம்