தமிழகம் சோமாலியாவாக மாறும்: தினகரன் எச்சரிக்கை

தமிழகம் சோமாலியாவாக மாறும்: தினகரன் எச்சரிக்கை

1 mins read

தர்மபுரி: காவிரி விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்தவர்கள் மத்திய அரசை நோக்கி ஒரு கேள்விகூட எழுப்ப வில்லை என அதிமுகவினரை டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். காவிரி பிரச்சினை தொடர்ந்தா லும், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல் படுத்தினாலும் தமிழகம் விரை வில் சோமாலியாவாக மாறும் என தர்மபுரியில் அமமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

"கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காவிரி வாரிய விவகாரத்தில் மத்திய அரசு வார்த்தை விளையாட்டு விளையாடுகிறது. பாஜகவின் இதுபோன்ற சதித் திட்டங்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டே இருக்கும்," என்றார் தினகரன். இதற்கிடையே, காவல்துறை யின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தினகரன் உள்ளிட்டோர் மீது தர்மபுரி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.