மு.க.ஸ்டாலின்: மோடி ஹெலிகாப்டரில் வந்தாலும் கறுப்புக்கொடி காட்டுவோம்

2 mins read

திருச்சி: தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்கும் என்றால், ஆயுள் முழுவதும் சிறை செல்லத் தயாராக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவிரி விஷயத்தில் பிரதமர் மோடி எள்ளளவிற்குக்கூடத் தமிழகத்திற்கு ஆதரவாகச் செயல் படவில்லை என அவர் குற்றம்சாட்டி உள்ளார். காவிரி உரிமை மீட்பு நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். தமது பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை சூரக்கோட்டைக்கு வந்த அவ ருக்கு, அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் பறை அடித்தும், அறுவடை செய்யப்பட்ட வயலில் பட்டாசு வெடித்தும் உற்சாக வர வேற்பு கொடுத்தனர். ஸ்டாலினுடன் தமிழக காங்கி ரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக் கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயலர் முத்தரசன் ஆகியோரும் வந்தனர். பின்னர் கூடியிருந்தோர் மத்தியில் பேசிய ஸ்டாலின், காவிரிக்காகப் போரா டும் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்றும், அது குறித்து கவலைப்படவில்லை என் றும் குறிப்பிட்டார்.

"வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாகச் சொல்கிறார்கள். மோடி சாலை மார்க்கமாக வந்தாலும், ஹெலிகாப் டர் மூலம் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்போம். "அன்றைய தினம் மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கறுப்பு உடை அணிந்தும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரி விக்க வேண்டும்," என்று ஸ்டா லின் வலியுறுத்தினார். நேற்று முன்தினம் இரவு கல் லணையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர தமிழக அரசு தவறிவிட்டது எனச் சாடினார். "ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் முதல்வர் எடப்பாடி மண்டியிட்டுக் கிடக்கி றார். இந்த நிலை இனிமேலும் நீடித்தால் பழனிசாமி தலைமையி லான அதிமுக அரசு இன்னும் 2 மாதங்கள்கூட நீடிக்காது," என்று மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் குறிப்பிட்டார்.