சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர் லைட் ஆலையை மூட வலியு றுத்தியும் திரைத்துறையினர் நடத்திய மௌனப் போராட்டம் எந்தவித சலசலப்பும் இன்றி நேற்று நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, தன்ஷிகா, வர லட்சுமி உட்பட ஏராளமான நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர். இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் கள் தாணு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். காலை 9 மணிக்குத் துவங்கிய இப்போராட்டம் மதியம் ஒரு மணி யளவில் முடிந்தது. கோரிக்கை களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செய்தியாளர்களி டம் பேசிய நடிகர் ரஜினி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரும் என எச்சரித்தார்.
"கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை வாழ்வாதாரமாக கொண் டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட் டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்க ளுக்கு பாதிப்பு என்றால் அதனை மூடித்தான் ஆகவேண்டும்.
போராட்டத்தில் பங்கேற்ற விஷால், வைரமுத்து, கமல், இளையராஜா, ரஜினி, விஜய். படம்: ஊடகம்

