கட்சிக்கும் தொண்டர்களுக்கும் புத்துயிரூட்டும் விஜயகாந்த்

கட்சிக்கும் தொண்டர்களுக்கும் புத்துயிரூட்டும் விஜயகாந்த்

1 mins read
fede51ee-793a-4850-b7ed-9efdff1c0432
-

சென்னை: ரஜினி, கமலின் அரசி யல் பிரவேசம், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள புது மாற்றங்கள் காரணமாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கட்சிக்கும் தொண் டர்களுக்கும் புத்துயிரூட்டும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி, கமல் இருவரும் தீவிர அரசியலில் ஈடுபடுவது உறுதியாகி விட்டது. கமல் ஏற்கெனவே கட்சி தொடங்கி, பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களைச் சந்திப்பது, பிரச் சினைகளைக் கேட்டறிவது என பரபரப்பாக உள்ளார்.

ரஜினியும் தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார். "ரஜினி, கமல் இருவரது ரசிகர்களும் தற்போது அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இது விஜயகாந்த் ரசிகர்களுக்கும் தேமுதிகவினருக் கும் ஒருவித கவலையை ஏற்ப டுத்தி உள்ளது. கமல் துவக்கி யுள்ள மக்கள் நீதி மய்யம் மற்றும் நடிகர் ரஜினி விரைவில் துவங்க வுள்ள கட்சியால், தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்படும் என அக்கட்சியினர் கருதுகின்றனர். "எனவே, இந்த நேரத்தில், தொண்டர்களுக்கும், கட்சி நிர் வாகிகளுக்கும் நம்பிக்கை ஊட்ட வேண்டிய கட்டாயம் விஜயகாந் துக்கு ஏற்பட்டுள்ளது. இதை மனதிற்கொண்டே, பல்வேறு நிகழ்ச்சிகளை, திட்டங்களை அவர் அரங்கேற்ற துவங்கி உள் ளார்," என்று அரசியல் கவனிப்பா ளர்கள் தெரிவித்துள்ளனர்