சென்னை: நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி நடத்திய பொதுக்கூட்டம் குறித்து விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு நடிகை ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரான அவர் தனது பதிலடியை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மாண்புமிகு ராஜூ அவர்கள் தன் கட்சிக்காரர்களை தண்ணீர் இல்லாத காவிரியில் குளிப்பாட்டி பார்க்கட்டும்,
கூட்டம் வரும். அய்யாவுக்கு இது ஒருவேளை தெரிந்திருக்கும்," என ஸ்ரீபிரியா குறிப்பிட்டுள்ளார். பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டது குறித்து கமல் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, எருமை மாட்டுடன் ஒப்பிட்டு கிண்டலாக அமைச்சர் ராஜு தன் கருத்தை கூறியிருந்தார். அதற்கு ஸ்ரீபிரியா பதிலடி கொடுத்துள்ளார்.

