சென்னை: மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கோவில் அர்ச்சகர் பாலகணேஷை போலிசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி சிவன் கோவிலில் பணிபுரிந்து வந்த இவர் தன் மனைவி ஞானபிரியாவுடன் வடபழனியில் வசித்து வந்தார். இத்தம்பதியர்க்கு குழந் தைகள் இல்லை. இதன் காரணமாக பால கணேஷை அவரது மனைவி அவ மானப்படுத்தியதாகக் கூறப்படு கிறது. இதனால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார் பாலகணேஷ்.
இதற்கு அவரது நண்பர் மனோஜ் உதவியுள்ளார். கடந்த 4ஆம் தேதி இரவு நண்பருடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்தார் பாலகணேஷ். கொள்ளையர்கள் கைவரிசை என சித்தரிக்க வேண்டும் என்பதற்காக மனைவியின் 15 பவுன் தங்க நகைகளை எடுத்து நண்பர் வீட்டில் மறைத்து வைத்திருக்கி றார். பின்னர் கொலை செய்யப் பட்ட ஞானபிரியா, பாலகணே ஷின் கை, கால்களை கட்டிப் போட்டு வீட்டிலிருந்து வெளியேறி யுள்ளார் மனோஜ். விசாரணையின் போது போலி சாருக்கு பாலகணேஷ் மீது சந் தேகம் வலுத்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாலகணேஷின் வீட்டுக்கு யாரும் செல்லவில்லை என்பதை போலிசார் உறுதி செய்தனர். இதையடுத்து விசாரணை கடுமையாகவே, உண்மையை ஒப்புக் கொண்டார் பாலகணேஷ்.
ஞானபிரியா, பாலகணேஷ்.

