காவிரி வரைவுத் திட்டம்: உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

காவிரி வரைவுத் திட்டம்: உச்ச நீதிமன்றம் புது உத்தரவு

1 mins read
1e9cded1-81f4-44ac-991e-298307e1b10e
-

சென்னை: காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை அமல்படுத்து வதில் எதனால் தாமதம் ஏற்படு கிறது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு மேலாண்மைத் திட்டத்தை தயாரித்து எதிர்வரும் மே 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கள் உத்தரவிட்டுள்ளனர். காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆறு வாரங்களுக்குள் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல் திட்டம் (ஸ்கீம்) ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 29ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக் கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை இதுவரை தொடங்கவில்லை. இதையடுத்து மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக் கைத் தொடுத்துள்ளது தமிழக அரசு. இந்த மனுவை நேற்று நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையி லான அமர்வு விசாரித்தது.