சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழகத்தின் வனப்பகுதியில் 90 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம், தமிழக வனத்துறைக்கு அனுப்பி உள்ளது. இதையடுத்து குறிப்பிட்ட பகுதிகளில் தீயணைப்பு மற்றும் தீத்தடுப்பு பணிகளை தமிழக வனத்துறை மேற்கொண்டுள்ளது. "நீலகிரி மாவட்டம், முக்குருத்தி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு, நடுவட்டம், பைகாரா, கவர்னர் சோலை உள்ளிட்ட ஆறு இடங்கள், கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, டாப் சிலிப், பொள்ளாச்சி உள்ளிட்ட, 45 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. "மேலும் ஈரோட்டில் 29 இடங்கள், கன்னியாகுமரியில் ஆறு இடங்கள், நெல்லை, தேனி, கிருஷ்ணகிரி, வேலூரில் 10 இடங்கள் என மொத்தம் 90 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது," என வன ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
90 இடங்களில் பற்றிய காட்டுத் தீ
1 mins read

