தேனி: நியூட்ரினோ ஆய்வு திட்டம் அமைந்தால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் வரை உள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் அழிந்துவிடும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ கவலை தெரிவித்துள்ளார். தனது நடைப்பயணத்தின் போது பொது மக்கள் மத்தியில் பேசிய அவர், செயற்கை நியூட்ரினோக்களை ஆராய்ச்சி செய்யும் மையத்தில் அணுக்கசிவு ஏற்பட்டால் சுற்றியுள்ள அனைத்து ஊர் மக்களும் அழிவார்கள் என்றார்.
"அமெரிக்காவிற்காக நடக்கக்கூடிய இந்த ஆராய்ச்சி திட்டத்தை நிறுவிட மத்திய அரசு துடிக்கிறது. வருமான வரி சோதனை நடவடிக்கைக்குப் பயந்து மாநில அரசும் இவ்விஷயத்தில் மவுனம் காக்கிறது. "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் நம் தலை மீது கல்லை போட்டது போன்று, மத்திய அரசு நியூட் ரினோ விஷயத்திலும் நடந்து கொண்டால் பெரிய போராட்டம் நடத்த தயாராக இருக்க வேண்டும். என் உயிரே போனாலும் இத்திட்டத்தை வரவிட மாட்டேன்," என்றார் வைகோ.

