பைக்கின் மூலமாகவே ஆறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு இந்தியப் பெண்கள் சாதனை படைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி, தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இந்த பைக் சுற்றுலா தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் 15 மாநிலங்கள் வழியாக மணிப்பூர் எல்லைக்குச் சென்றடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து மியன்மார், தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம், பங்ளாதேஷ் வந்தடைந்தனர்.
மொத்தம் 16,992 கி.மீ தூரம் சுற்றுப்பயணம் செய்தனர். இதுகுறித்துப் பேசிய தெலுங்கானா சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநர் மனோகர், "பைக் பயணத்தில் பல்வேறு பிரிவைச் சார்ந்த மக்களைச் சந்தித்து, தெலுங்கானா, இந்தியாவின் புனிதம், புகழ், தொன்மை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தனித்துவம் வாய்ந்த, என்றென்றும் மறக்கமுடியாத அற்புதப் பயணமாக பைக் பயணம் அமைந்தது," என்று தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

