இரட்டைக் கொலை: மூன்று எம்எல்ஏக்கள் கைது

இரட்டைக் கொலை: மூன்று எம்எல்ஏக்கள் கைது

1 mins read
602b7f01-ed35-4725-ba4a-2beea19ab70c
-

மகாராஷ்டிரா: சிவசேனா கட்சி யைச் சேர்ந்த தலைவர்கள் இருவரை கொன்றதன் தொடர்பில் அகமத்நகர் எம்எல் ஏக்கள் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், அகமத் நகர் ஷாஹூன்நகர் பகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் கோத்கார், 35, வசந்த் துபே, 40 ஆகிய இருவரும் பட்டப்பகலில் நேற்று முன்தினம் மாலை 5.15 மணி அளவில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். குண்டடி காயங் களுடன் கீழே விழுந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். அதில் என்சிபி கட்சியைச் சேர்ந்த சாங்ரம் ஜக் தாப், பாஜகவின் சிவாஜி கார் டிலே, என்சிபி கட்சியின் அருண் காகா ஜக்தாப் ஆகிய மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் குறிபார்த்து சுடுபவரும் கைதானார். உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக் கொலைகள் நடந் துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எம்எல்ஏ சாங்ரம் ஜக்தாப்பை போலிசார் கைது செய்கின்றனர். படம்: ஊடகம்