சென்னை: சேப்பாக்கம் கிரிக்கெட் திடலின் வாயிற்கதவுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்திய வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பலர் கைதாகினர். இந்தச் சம்பவம் காரணமாக சேப்பாக்கம் பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பு நிலவியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக் கான ஆட்டங்களை சென்னையில் நடத்த எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும்நிலையில், இளையர்களை திசை திருப்பும் வகையில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக் கூடாது என அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக ளும் வலியுறுத்தி வருகின்றன. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியைப் புறக்கணிக்க வேண் டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்ப்பாளர்கள், இதையும் மீறி போட்டி நடத்தப்பட்டால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
ஐபிஎல் போட்டி ஆட்டங்கள் நடைபெறும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் திடலை முற்றுகையிடு வோம், வீரர்களைச் சிறைபிடிப்போம் எனவும் சில தரப்பினர் அறிவித் துள்ளனர். நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டியின் முதல்சுற்று ஆட்டங்க ளில் ஒன்று நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டி ருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நேற்று சேப்பாக்கம் திடல் அருகே திரண்டனர்.
கடுமையான சோதனைகளுக்கு பிறகே அனைவரும் திடல் உள் பகுதியை நெருங்க அனுமதிக்கப் பட்டனர். இந்நிலையில் திடலுக்கு அருகே உள்ள பறக்கும் ரயில்வே நிலையம் வழியாக பயணிகள் போல் வந்த வாழ்வுரிமைக் கட்சி யினர், போலிசார் அசந்த நேரம் பார்த்து, திடீரென கிரிக்கெட் திடலின் வாயிற்கதவுகளை ஒன்றை சங்கிலியால் இழுத்துப் பூட்ட முயன்றனர். இதையடுத்து போலிசார் அவர்களைத் தடுத்தபோது, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட் டக்காரர்கள் தங்கள் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த வாழ் வுரிமைக் கட்சிக் கொடிகளைக் காட்டி முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அனை வரும் கைதாகினர்.

