சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது மத்திய அரசு வழக்கறிஞரிடம் மத்திய அரசுக்கு சாதகமாகவும், தமிழக அரசு வழக்கறிஞரிடம் தமிழக அரசுக்கு சாதகமாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் குழப்பம் தீர்வதற்கு பதிலாக அதிகரித்துள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தைக் குறிப்பிட்டக் காலத் திற்குள் அமைக்காததற்காக மத் திய அரசைக் கண்டித்த நீதிபதிகள், அதற்குப் பிறகும் மத்திய அரசுக்கு அவகாசம் கொடுத்தி ருக்கக் கூடாது என்றும், மாறாக, நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயல் படுத்துவதற்கான செயல்திட்டத்தை உச்சநீதிமன்றமே உருவாக்கி அதை 4 நாட்களில் செயல்படுத்துங் கள் என்று கூறியிருக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார். "இவ்வாறு உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவிட்ட தற்கு பல உதாரணங்கள் உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற் கான மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வு ஆணையிட்டுள்ளது.
"ஆனால் நீதிபதிகள் அவ்வாறு செய்யவில்லை. மாறாக காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல் படுத்துவதற்கான செயல்திட்டத் தின் வரைவை தயாரித்து மே 3ஆம் தேதி தாக்கல் செய்யுங்கள் என்று ஆணையிட்டுள்ளனர். அவ் வாறு தாக்கல் செய்தாலும் கூட அதை உடனடியாக செயல்படுத்த ஆணையிட மாட்டார்களாம். "மாறாக அதை தமிழ்நாடு, கர் நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்களிடம் தந்து கருத்துக் கேட்பார்களாம். அதன் பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப் பார்களாம். இதென்ன கொடுமை?" என ராமதாஸ் தமது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மத்திய அரசை கண்டிப்பது போல வலிக்காமல் அடித்தும் தமி ழகத்தின் வயிற்றில் கொடூரமாக அடித்தும் உச்சநீதிமன்றம் வஞ் சித்துக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.

