சென்னை: தமிழகத்தின் வளங்க ளும் நிலங்களும் அழிக்கப்பட்டு உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக் கப்படுவதால் எந்தத் திசையில் திரும்பினாலும் நாளுக்கு நாள் போராட்டங்கள் வளர்ந்து கொண்டே இருப்பதாக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தெரிவித் துள்ளது. தமிழ்த் திரைப்பட இயக்குநர் இணைந்து இந்தப் பேரவையைத் துவக்கியுள்ளனர். இதையடுத்து இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, தங்கர் பச்சான், அமீர் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, காவிரிப் பிரச்சி னைக்காக ஆயுதம் ஏந்தி போராட தயார் என்று அவர்கள் ஆவேசத்துடன் குறிப்பிட்டனர். "தமிழ்நாட்டையும் தமிழ் மக் களையும் பாதுகாக்க வேண்டும் என்றால் கட்சி, மதம், சாதி அடையாளங்களைத் தாண்டி ஒன்றுபட்ட தமிழர் அமைப்பு அவசியமாகிறது. எந்த அரசியல் சார்புமின்றி இந்த இயக்கம் செயல்படும். கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை மற்றும் ஆளுநர் மாளிகையை மூடும் போராட்டம் நடத்தப்படும்.," என்று பாரதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத் திய நீர் வளத் துறை செயலாளர் யு.பி.சிங், நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை தமிழகத்தில் வேண் டுமானால் காவிரி வாரியம் என்று அழைத்து கொள்ளட்டும் என்றார். "காவிரி விவகாரத்தில் அந் தந்த மாநிலங்கள் தங்கள் நலன் களை மட்டுமே பார்க்கின்றன. ஆனால் மத்திய அரசு கூட் டாட்சி அடிப்படையில் பார்க்கி றது. காவிரி விவகாரத்தில் எது சிறந்ததோ அதை மத்திய அரசு செய்யும்," என்றார் யு.பி.சிங்.

