தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. கடந்த 58 நாட்களாக போராட்டம் நடத்தியும் கூட, அரசுத்தரப்பு தங்களைக் கண்டு கொள்ளவில்லை என்ப தால் போராட்டக் குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள தூத்துக்குடியில் மொத்தம் 12 இடங்களில் பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான நட வடிக்கைகள் தொடங்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அ.குமரெட்டியாபுரம் கிராமத் தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போராட்டம், ஏறத்தாழ இரண்டு மாதங்களை நிறைவு செய்யப் போகிறது. மேலும் அரு கில் உள்ள 9 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் பின்னர் இணைந்தனர்.
தற்போது மில்லர்புரம், சிலோன் காலனி பகுதி பொதுமக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வரிந்துகட்டி உள்ளனர். நேற்று முன்தினம் இப்பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஏராளமான பெண்கள் குழந் தைகளுடன் கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெறும் போராட் டத்தின் போது மக்கள் களைப் படையாமல் இருக்கும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. சில்வர்புரத்தில் இளையர்கள் சிலர் தப்பாட்டம் ஆடி நூதன முறையில் போராட் டத்தில் ஈடுபட்டனர். தப்பாட்டம் ஆடியவர்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான விழிப்புணர்வுப் பாடல் களைப் பாடினார்கள். இதை கிராம மக்கள் ரசித்தவாறு போராட்டத்தில் பங்கேற்றனர்.
தப்பாட்டம் ஆடி எதிர்ப்பை பதிவு செய்த இளையர்கள். படம்: தகவல் ஊடகம்

