மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கைபேசி உபகரணங்கள் பறிமுதல்

மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கைபேசி உபகரணங்கள் பறிமுதல்

1 mins read

பெங்களூரு: சென்னையிலிருந்து மும்பைக்கு லாரி மூலம் கடத்திச் செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 'அக்சரிஸ்' எனப்படும் கைபேசி உபகரணங்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைபேசி உறை, கைபேசியின் உதிரி பாகங்கள், எல்சிடி பட்டைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிய போலிசார் அவை சீனா அல்லது துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கூறினர். இரண்டு நாட்களுக்கு முன்னர், ரயில் மூலம் 10,000 உயர் ரக கைபேசி மாடல்களுடன் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.