சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி; 18 பேர் பலி

சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த லாரி; 18 பேர் பலி

1 mins read

புனே: சாலையோர தடுப்பில் மோதி லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர். கர்நாடக மாநிலம் பிஜாபுரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் புனேயில் உள்ள தொழில் பேட்டை யில் பணிபுரியும் 32 பேர் வழக் கம்போல், லாரியில் புனே நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர். அப்போது புனே = பெங்களூரு தேசிய சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மகாராஷ்டிரா வின் சத்தாரா மாவட்டம் அருகே கந்தாலா பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பியது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி தலை குப்புறக் கவிழ்ந்தது. இதில் பெண்கள் உட்பட 17 பேர் பலியாகினர். 15 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச் சைக்காக அருகில் உள்ள மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் நடந்ததாக போலிசார் கூறுகின்ற னர். தூக்கமின்மை காரணமாக ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று கூறப்பட்டாலும் விபத்துக் கான காரணம் குறித்து விசா ரணை செய்யப்படுவதாக போலி சார் தெரிவித்தனர். இதற்கிடையே, மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் சியோனி சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாகினர்.