மீண்டும் நீல நிறத்திற்கு மாறியது அம்பேத்கர் சிலை

மீண்டும் நீல நிறத்திற்கு மாறியது அம்பேத்கர் சிலை

1 mins read
f84acb73-4562-4a5c-aa2c-29898a62a87e
-

லக்னோ: மறுசீரமைக்கப்பட்ட அம் பேத்கர் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய தால், சிலை மீண்டும் நீல நிறத் திற்கே மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அம்பேத்கர் சிலைகள் மர்ம நபர் களால் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், படாவுன் நக ரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத் கர் சிலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. முன்னர் நீல நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு சீரமைப்பின் போது காவி நிற பூச்சு அடிக் கப்பட்டிருந்தது.

ஆனால் மக்களிடையே இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற் கிடையே பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஹிமேந்திர கௌதமின் முயற்சியால் அம்பேத்கர் சிலைக்கு மீண்டும் நீல நிற பூச்சு பூசப்பட்டது. ஏற்கெனவே, யோகி ஆதித்ய நாத் முதல்வராக பதவியேற்றதும் முதல்வர் அலுவலகம் உள்பட பல் வேறு அரசு அலுவகங்கள் காவி நிறத்திற்கு மாறியது குறிப்பிடத் தக்கது. காவி நிறத்தில் மறுசீரமைக்கப் பட்ட அம்பேத்கர் சிலைக்கு மீண்டும் நீல சாயம் பூசப்பட்டது. படம்: ஊடகம்