ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணா சாலையில் திரண்ட மக்கள்

ஐபிஎல்லுக்கு எதிராக அண்ணா சாலையில் திரண்ட மக்கள்

2 mins read
bdfcd153-5b7b-4dd1-a2ee-1722f539802a
-

சென்னை சேப்பாக்கம் மைதானத் தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரி வித்து நேற்று அண்ணா சாலையில் பல்லாயிரக்கணக் கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலி சார் தடியடி நடத்திக் கலைத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே யான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று சேப்பாக்கம் எம்.எ.சிதம்பரம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஐபிஎல் போட்டி களைக் காணச் செல்லவேண்டாம் என பல தரப்பினரும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டனர். அதன்மூலம் அனைத்துலக சமூகத்தின் கவ னத்தை காவிரிப் பிரச்சினை யின்பால் ஈர்ப்பது நோக்கம்.

எதிர்ப்புகள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். பல்வேறு விதமான போராட்டங் களுக்கு மத்தியில் வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் மைதானத்தை அடைந்தது. ரசிகர்கள் மைதானத்துக்குள் செல்லும் வாலாஜா சாலையை நோக்கிச் சென்ற போராட் டக்காரர்கள்மீது போலிசார் தடியடியில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கிடையே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனு மதிக்கப்பட்டனர்.

நேற்று அண்ணா சாலையில் சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குச் செல்லும் சாலையில் சக்கர நாற்காலியில் மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள், எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: சதீஷ்