சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி பாமக சார்பில் நேற்று நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் கார ணமாக சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது. ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பாமக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட பாமக இளையரணித் தலைவர் அன்பு மணியும் கைதானார். இதற்கிடையே திண்டிவனத் தில் ரயில் மீதேறி நின்று போராடிய பாமக தொண்டர் ஒருவர் மின்சா ரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழர்களை போர் நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளாதீர்கள் என மத்திய அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அவர், செய்தி யாளர்களிடம் பேசுகையில், காவிரி விவகாரத்தில் தமிழ் நாட்டுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.
அரியலூரில் வெறிச்சோடிய சாலைகள். படம்: தகவல் ஊடகம்

