பிரதமரை சந்திக்க நேரம் கூட கேட்காத முதல்வர் பதவி விலகட்டும்: ஸ்டாலின்

பிரதமரை சந்திக்க நேரம் கூட கேட்காத முதல்வர் பதவி விலகட்டும்: ஸ்டாலின்

2 mins read

திருவாரூர்: தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் நாற்காலி போய்விடுமோ என்ற பயத்துடன் பதவியில் அமர்ந்திருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர் சித்துள்ளார். காவிரியில் தமிழகத்தின் உரி மையை மீட்கவே தாம் நடைப் பயணம் மேற்கொண்டிருப்பதாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். தமது இந்தப் பயணத்தோடு போராட்டம் முடிந்துவிடும் என யாரும் நினைக்க வேண்டாம் என்று தெரிவித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை போராட்டம் தொடரும் எனத் திட்டவட்டமாகக் கூறினார். செவ்வாய்க்கிழமை தமது நான் காம் நாள் பயணத்தை துவங்கிய ஸ்டாலின், திருக்கண்ணமங்கை வழியாக குளிக்கரை பகுதிக்கு வந்து, பின்னர் அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணம் செய்து தேவர்கண்டநல்லூரை வந்தடைந் தார்.

அங்கு விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் அதில், 'பிரதமரை சந்திக்க வேண்டும்' என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது என்றும் சுட்டிக் காட்டினார். அந்த தீர்மானம் இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார். "பிரதமரை சந்திக்க, தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப் படவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி யுள்ளார்.

இதை தமிழக அரசோ, முதல்வரோ, துணை முதல்வரோ மறுக்கவில்லை. எனவே முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமி விலக வேண்டும்," என ஸ்டாலின் வலியுறுத்தினார். இதற்கிடையே ஐபிஎல் போட் டிக்கு எதிராக அறவழியில் போரா டியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக் கது என்றும் அவர் கூறியுள்ளார். "காவிரி நதிநீரில் தமிழகத் துக்கு உள்ள உரிமைகளை காலில் போட்டு மிதித்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி அரசு இனி ஆள்வதற்கான அனைத்து தகுதியையும் இழந்து நிற்கிறது. போலிசாரின் அத்துமீறலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்," என ஸ்டாலின் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.