தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தந்தையை பராமரிக்காத மகனின் சொத்து பறிமுதல்

1 mins read

பழநி: பழநியில் தந்தையைக் கவனித்துக்கொள்ளாத மகனின் சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. கொழுமங்கொண்டான்ஊரைச் சேர்ந்த 75 வயது ராமசாமிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அவர் தனது பெயரில் இருந்த நான்கு ஏக்கர் நிலத்தை மகனுக்கு எழுதிக்கொடுத்தார். ஆனால் தன்னை மகன் கவனித்துக் கொள்வதில்லை என்றும் சாப்பாட்டுக்கு மிகவும் சிரமப்படுவதாகவும் பழநி ஆட்சி யரான அருண்ராஜிடம் ராமசாமி புகார் அளித்தார். இது குறித்து கிராம அதிகாரி விசாரணை மேற்கொண்டார். அப்போது சொத்தை எழுதி வாங் கிய பிறகு ராமசாமியை அவரது மகன் பராமரிக்காதது தெரிந்தது.

இதையடுத்து தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டப்படி கீரனூர் சார் பதிவாளர் அலுவலகத் தில் பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்ய ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இது குறித்து பேசிய அருண் ராஜ், "பெற்றோரிடம் சொத்தைப் பெற்று வயதான காலத்தில் பரா மரிக்காமல் தவிக்கவிடும் மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று உறுதி யளித்தார்.