இலங்கையிலிருந்து தங்கம் கடத்த முயற்சி

இலங்கையிலிருந்து தங்கம் கடத்த முயற்சி

fallback

13 Apr 2018 - 6:00 am

1 mins read

ராமேசுவரம்: இலங்கை ராணுவத் தினர், இந்தியாவுக்கு 24.2 கிலோ தங்கம் கடத்தும் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் நடுக் கடலில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்து மூவரை இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். இலங்கைக் கடற்படையினர் நேற்று முன்தினம் நடுக்கடலில் சுற்றுக்காவல் பணியை மேற் கொண்டனர்.

நடுக்கடலில் ஒரு பிளாஸ்டிக் படகு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அவர் களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இலங்கைக் கடற் படையினர் படகை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது படகில் 24.2 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மொத்தம் 242 தங்கக் கட்டிகள் இருந்தன. ஒவ்வொன்றின் எடை 100 கிராம். இதன் மதிப்பு ரூ.75 லட்சம் என்று நம்பப்படுகிறது. அதனை தொடர்ந்து தங்கத் தைக் கைப்பற்றிய இலங்கைக் கடற்படையினர், படகையும் அதில் இருந்த மூவரையும் பிடித்துச் சென்று விசாரித்தனர்.

தங்கம் யாருக்குக் கடத்தப்படு கிறது என்றும் இதன் பின்ன ணியில் இருப்பது யார் என்பது பற்றியும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.