'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத்தில் திடீர் குழப்பம்

'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத்தில் திடீர் குழப்பம்

1 mins read

தூத்துக்குடி: 'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அந்த ஆலை யைத் திறக்க வேண்டும் என்று கோரி ஆலைத் தொழிலாளர்கள் போட்டி ஆர்ப்பாட்டத்தில் இறங்கி உள்ளனர். சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்த மான ஸ்டெர்லைட் தாமிர உருக் காலை அமைந்துள்ளது. கடந்த 1997ல் தொடங்கப்பட்ட இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபட்டு பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ஆலையை விரி வாக்கம் செய்ய நிர்வாகம் முயற்சி செய்வதாகத் தகவல் வெளி யானதைத் தொடர்ந்து தூத்துக்குடி பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'ஸ்டெர்லைட் ஆலையை விரி வாக்கம் செய்யக்கூடாது', 'ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்', 'காப்பர் உங்களுக்கு கேன்சர் எங்களுக்கா' என்ற முழக்கங்களுடன் அப்பகுதி மக்கள் பிப்ரவரி மாதத்திலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.

இவர்களுடைய போராட்டத் திற்கு தமிழக அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே 'ஸ்டெர்லைட்' ஆலையைத் திறக்க வலியுறுத்தி 2000க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் வளாகத்திலேயே திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந் துள்ளனர்.