சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நேற்று கறுப்புக் கொடி காட்டும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றினர். மேலும் தங்களின் சட்டைகளில் கறுப்பு வில்லைகள் அணிந்துசென்றனர். திமுக ஆதரவாளர்கள் நடத் தும் கடைகள், வணிக நிறுவனங் கள் ஆகியவற்றின் முகப்புகளில் கறுப்புக் கொடி காணப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறும் என திமுக தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது. மோடி சென்னைக்கு வரும் நாள் தமிழகத்துக்கு துக்க நாள் என்றும் அவருக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் திமுக தலைமை வலியு றுத்தி இருந்தது.
நேற்று சென்னையில் கறுப்பு பலூன்கள், புறாக்கள் ஆகிய வற்றை திமுகவினர் பறக்கவிட்ட னர். விமானத்தில் வரும் பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிலர் 80 அடி உயரம் கொண்ட விளம்பர பலகைகள் மீது ஏறி நின்று கறுப்புக் கொடி காட்டினர். போராட்டத்தையொட்டி சென் னையில் உள்ள திமுக தலைமை யகமான அண்ணா அறிவாலயம், அக்கட்சித் தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் வீடுகளி லும் கறுப்புக் கொடி ஏற்றப் பட்டிருந்தது.
கறுப்புச் சட்டையில் கருணாநிதி (இடது), பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டின் வாயிற்பகுதியில் கட்டப்பட்டிருந்த கறுப்புக்கொடி. படம்: சதீஷ்

