இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆசிஃபா என்ற அந்தச் சிறுமியை மயக்க நிலையிலேயே வைத்திருந்து, உண்ண உணவும் தராமல் மாறி மாறி வன்புணர்வு செய்த கும்பல், பின்னர் அவரைக் கழுத்தை நெரித்தும் கல்லால் அடித்தும் கொன்று, உடலை வீசி விட்டுச் சென்றது. இவ்விவகாரத்தில் முன்னாள் அரசு அதிகாரி சஞ்சி ராம், அவர் மகன் விஷால் ஜங்கோத்ரா, போலிஸ்காரர்கள் சிலர் உட்பட எண்மர் கைது செய்யப்பட்டுள் ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத் தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகக் குறிப்பிட்ட பெண்கள், குழந்தைகள் மேம் பாட்டிற்கான மத்திய அமைச்சர் மேனகா காந்தி, "12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வு செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க ஏதுவாக சட்டத் திருத்தம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முப்தியும் சிறுமியரைப் பாலியல் வன்புணர்வு செய்வோ ருக்குக் கட்டாய மரண தண் டனை விதிக்கும் வகையில் தமது அரசு புதிய சட்டத்தை இயற்றும் என்று கூறியுள்ளார். ஆசிஃபாவின் தந்தை முகம் மது யூசுஃப் புஜ்வாலாவும் குற்ற வாளிகளுக்குத் தூக்கு தண் டனை விதிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
"மகளின் பிரிவை எண்ணி நாங்கள் வாடுகிறோம். அவளது இறப்பிற்குக் காரணமானோரைச் சாகும் வரையில் தூக்கிலிட வேண்டும்," என்றார் அவர். அவர் தம்முடைய மனைவி, இரு பிள்ளைகள், கால்நடைகளு டன் ஊரைக் காலி செய்துவிட்ட தாகவும் இந்திய ஊடகத் தக வல்கள் கூறுகின்றன.
தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைத் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் களில் சிலர், அந்தக் கோரமான சம்பவம் குறித்த சில உண்மை களை எழுத்துமூலம் தாக்கல் செய்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்விடம் முறையிட்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு, ஆசிஃபா மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யவிடாமல் வழக்கறி ஞர்கள் சிலர் தடுத்ததற்கும் ஆசிஃபா குடும்பத்தினர் சார்பில் முன்னிலையாகும் வழக்கறிஞர் களுக்கு மிரட்டல் விடுத்ததற்கும் விளக்கமளிக்கக் கோரி கத்துவா, ஜம்மு-=காஷ்மீர் வழக்கறிஞர் சங் கங்களுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறது.
நள்ளிரவில் ராகுல் பேரணி
இந்நிலையில், காஷ்மீர், உத்தரப் பிரதேசத்தில் இரு சிறுமியருக்கு நேர்ந்த கொடூரத்திற்குக் காரண மானோர் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று முன் தினம் நள்ளிரவு மெழுகுவத்தி ஏந்தி பேரணி சென்றார். அவரு டைய சகோதரி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள், மாண வர்கள் உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர்.
கமல் உருக்கம்
இதனிடையே, பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தவறிவிட் டதாகக் கூறி ஆசிஃபாவிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன். "எதிர்காலத்தில் உன் னைப் போன்ற குழந்தைகளுக்கு இதுபோன்ற அநீதிகள் இழைக்கப் படாமல் தடுக்கப் போராடுவேன்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.