நடிகர் ரஜினி வீதியில் இறங்கிப் போராடுவாரா - திருமுருகன் காந்தி

நடிகர் ரஜினி வீதியில் இறங்கிப் போராடுவாரா - திருமுருகன் காந்தி

2 mins read
42b862f3-db21-4560-b98f-b7d9a7678738
-

சென்னை: ரஜினிகாந்த் வீதியில் இறங்கிப் போராடுவாரா என்று 'மே 17' இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். திருவிடந்தை ராணுவக் கண்காட்சியில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி காட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலிசார் தடியடி நடத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய 'மே 17' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "இங்கு கைது செய்யப்பட வேண்டியவர்கள் மோடி மட்டுமே. தமிழ்நாட்டு மக்கள் அல்ல.

"எமர்ஜென்சி போன்ற சூழலை தமிழக அரசு ஏற்படுத்துகிறது. டுவிட்டரில் தொடர்ந்து கருத்து கள் பதிவிட்டு வரும் ரஜினிகாந்த், மக்கள் பிரச்சினைக்காக வீதிக்கு வந்து போராடுவாரா? "பொதுமக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராட வேண்டும். இது நம் பிரச்சினை. நாம்தான் களமிறங்கி தீர்வுகாண வேண்டிய சூழல் உள்ளது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே காவிரிப் போராட் டத்தின் ஒரு பகுதியாக செம் மொழி விரைவு ரயிலைக் கவிழ்க் கும் சதி நடந்ததாகக் கூறப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலிருந்து தஞ்சை மார்க்க மாக கோவை செல்லும் செம்மொழி விரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு நீடாமங்கலம் வந்தது. இந்த ரயில் புறப்பட்டுச் செல்வதற்கு சிக்னல் கிடைக்க வில்லை.

ரயில்வே ஊழியர்கள் சிக்னல் கிடைக்காதது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது இரு தண்ட வாளங்கள் மாற்றப்படும் இடத்தில் பெரிய பாறாங்கல்லும் ஜல்லிக்கற் களும் குவிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் நீடாமங்கலத்தில் இருந்து நாகை, மன்னார்குடி செல் வதற்கான தண்டவாள இணைப்பு பகுதியையும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கும் தண்டவாளத்தில் பாறாங்கல், ஜல்லிக்கற்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள், இதுபற்றி திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.2018-04-14 06:00:00 +0800