ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தீவிரம்

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தீவிரம்

2 mins read
Google News Preferred Icon

தூத்துக்குடி: தூத்துக்குடி= மதுரை சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை அமைந் துள்ளது. இங்கு ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. பொது மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற் படுகிறது எனக் கூறி ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். இதற்காக அ.குமரெட்டியா புரத்தில் பொதுமக்கள் 61வது நாளாக போராட்டம் நடத்தி வரு கிறார்கள். மேலும் பண்டாரம்பட்டி, சில் வர்புரம், சங்கராப்பேரி உள்ளிட்ட 12 இடங்களில் போராட்டம் நடை பெற்று வருகிறது.

தூத்துக்குடி வஉசி கல்லூரி, காமராஜ் கல்லூரி, கோரம்பள்ளம் அரசு ஐடிஐ மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து அந் தந்த கல்லூரிகள் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என முழக்கம் எழுப் பினார்கள். விவிடி சிக்னல் பகுதியில் இருந்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி யாகப் புறப்படத் திட்டமிட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலிசார் குவிக்கப்ப‌ட்டார்கள்.

அதிரடிப்படைப் போலிசாரும் அங்கு வரவழைக்கப்ப‌ட்டனர். போலிசார் இரும்புத் தடுப்பு அமைத்து இருந்தனர். தடுப்பு களைத் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்கள், போலி சார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மாணவர்கள் பேருந் தில் ஏறி ஆட்சியர் அலுவலகத் துக்குச் சென்றனர். "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், கல் லூரி மாணவர்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் மாநிலம் முழு வதும் ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தைப்போல விரிவு படுத்தப்படும். ஆலையை மூடும் வரை எங்களது போராட்டம் தொட ரும்," என்று மாணவர்கள் தெரிவித்தனர்.