திமுகவின் சந்தர்ப்பவாதம்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திமுகவின் சந்தர்ப்பவாதம்: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

1 mins read

சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி தீர்மானம் இயற்றும் திமுக தலைமை, கர்நாடக அரசை எதிர்த்து ஏன் தீர்மானம் போடவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரே வேண்டாம் என்று கூறும் திமுகவினர் பிரதமரை சந்திக்க மட்டும் ஆளுநரிடம் உதவி கேட்பது சந்தர்ப்பவாதம் எனச் சாடினார். "தமிழகத்துக்கு ஆளுநரே தேவையில்லை, அவர் எப்படி ஆய்வு நடத்தலாம் என்றெல்லாம் கூறுபவர்கள், இன்று ஆளுநரைச் சந்திக்கின்றனர். இது எந்தளவுக்கு சந்தர்ப்பவாதம் என்பதை மக்கள் புரிந்துகொள்வர்," என்றார் ஜெயக்குமார்.