ஸ்டெர்லைட்: அமமுக எதிர்ப்பு

1 mins read

மதுரை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தூத்துக்குடியில் வரும் 17ஆம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ளார். முன்னதாக கடந்த 8ஆம் தேதி இப்பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது. காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி அனுமதி பெற்றுள்ளது அமமுக.