போராடுபவர்கள் தேச துரோகிகளாக சித்திரிக்கப்படுகின்றனர்: சீமான் வேதனை

1 mins read

சென்னை: தமிழகத்தில் மண் வளத்தையும், நாட்டின் நலத்தையும் காக்க போராடும் நபர்கள் தேச துரோகிகளாகச் சித்திரிக்கப்படு வதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களி டம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்கள் கூறுவ தால் காவிரி தண்ணீர் வந்து விடாது என்றார்.

போராட்டத்தில் ஈடுபடும் மாண வர்களை கைது செய்வது, தாக்கு தல் நடத்துவது, சிறையில் அடைக் கும் நடவடிக்கைகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படமாட்டாது என்றார். "சென்னை வந்த பிரதமரிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முதல்வர் மனு அளித்துள்ளார். ஆனால், அந்த மனுவுக்கு பிரதமர் எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள், பிரத மர் வருகைக்கு எதிரான போராட் டங்கள் குறித்து தெரிந்திருந்தும் பிரதமர் எந்தப் பதிலும் தெரிவிக் காமல் இருப்பது தமிழகத்தை அவமதிக்கும் செயல்," என்றார் சீமான்.

இதற்கிடையே கரூரில் செய்தி யாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியத்திற் காக மக்கள் ஒன்று திரண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். "பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்," என்றார் தம்பிதுரை.