பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி, யோகாசனத்தில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இவர் நடராஜசனா யோகா நிலையை நிகழ்த்திக் காட்டினார். பின்னர் செலபாஸ் எனும் மார்புப் பகுதியைத் தரை யில் படும்படி உடலை வளைத்து உருண்டபடி சுமார் 13.8 விநாடி களில் 20 மீட்டர் தூரத்தை அடைந்து சாதனை படைத்தார்.
மேலும் தாடையை தரையில் ஊன்றி 7 நிமிடங்கள் யோகாச னம் செய்தும் அசத்தினார். இதன் மூலம் முந்தைய சாத னையை அவர் தகர்த்துள்ளார். மார்புப் பகுதியை இறுக்கி, பாதத்தைப் பயன்படுத்தி 18.28 வினாடி நேரத்தில் முட்டைகளை குடுவையில் வைத்து மற்றொரு கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார் வைஷ்ணவி. படம்: தமிழக ஊடகம்

